யாழ். பல்கலைக்கழகத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கையின் சுதந்திர தின விழாவில் இருவரும் பங்கேற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தசுரரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளில், “ஜனநாயக சோசலிஷக் குடியரசு எனப்படும் இலங்கையின் தேசிய சின்னங்கள் அனைத்திலும் சிங்கள மேலாதிக்கத்தைப் பிரதிபலிக்கும் அடையாளங்களே உள்ளன. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கையின் அரசியல் சாசனத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த 43 வருடங்களாக இலங்கையின் அனைத்து தேசிய தினங்களையும் தமிழர்கள் புறக்கணித்தே வந்தனர். அரசாங்கம் என்பது மாறக் கூடியது. ஆனால் சிங்கள மேலாதிக்கவாதிகளின் அடக்கியாளும் ஆக்கிரமிப்புப் போக்கும் தமிழ் மக்களின் கொள்கைப் பற்றும் மாறாதவை என்பதை சம்பந்தனும் பின் கதவால் தமிழ் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனும் அறியாத ஒன்றல்ல. இருந்தும் தாம் சார்ந்த மக்களினதும் கட்சியினதும் விருப்புக்கு மாறாக இத்தகைய காரியத்தை அவர்கள் எதற்காக நிகழ்த்தினர் என்பதே தமிழரை வேதனையடைய வைத்துள்ளது. இவர்களின் செயல் மக்களின் கொள்கைகளையும், கட்சிக் கொள்கைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும். அண்மைக் காலமாக தமிழ் அரசியலை ஏகபோகமாக நடத்தி வரும் சம்பந்தரையும் அவருக்குப் பக்க வாத்தியமாக இருந்து தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படாமல் பின் கதவால் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரனையும் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தூக்கி எறியும் காலம் வெகு தொலைவில இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila