
வவுனியா மாவட்டத்தில் 23 ஆயிரத்து 777 ஏக்கர் காணி இராணுவத்தின் அபகரிப்பில் உள்ளதாகவும் அதனை எவரும் கண்டுகொள்வதில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் மொத்தமாக 71 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலங்கை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இவற்றில் விவசாய நிலங்கள், தொழிற்புலங்கள், பொதுமக்களின் காணிகள், அரச காணிகள், பொதுமக்கள் அலுவலகங்கள் எனப் பலவும் அடங்குகின்றன. வடக்கு மாகாணத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே அதிகளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. என அம் மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும் வீடுகளையும் வாழ்வாதாரத் தொழிலையும் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் புதிய அரசு 23ஆயிரத்து 777 ஏக்கர் நிலத்தில் வெறும் 14 ஏக்கரை மாத்திரமே வவுனியா மாவட்டத்தில் விடுவித்துள்ளது மாவட்டத்தின் வளமான, கேந்திர முக்கியத்துவமான பகுதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.