வடமாகாணத்தின் இராணுவ முகாம்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதன்படி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களுக்கு சிலர் கல்லெறி தாக்குதல்களை நடத்தி இருப்பதாக போலியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏற்றப்பட்டதாகவும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது
இவை எதுவும் உண்மையானவை இல்லை.
இவை தேசிய நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.