இனி வரும் காலங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட மாட்டாது - தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட மாட்டாது- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இறுதி நேரத்தில் இராணுவத்தின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற முன்னைய அரசாங்கம் முயற்சித்தது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தலைநகர் கொழும்பில் இராணுவத்தினரை நிலைநிறுத்துமாறு படையினருக்கு இறுதி நேரத்தில் உத்தரவிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க இந்த உத்தரவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தின் ஊடாக நாட்டின் ஆட்சியில் நீடிக்க முன்னைய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இறுதி நேரத்தில் இந்த உத்தரவுகளை அரச அதிகாரிகள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் இணைய தளங்கள் முடக்கப்பட மாட்டாது எனவும், தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.