
சிறிலங்கா அரசின் உத்தியோகபூர்வ இவ்வார கன்சாட் பதிவில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இரா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் செல்வம் அடைக்கலநாதன் பிரதிக் குழுக்களின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல பொறுப்புக்கள் த.தே.கூட்டமைப்பு எம்பிக்களிடம் வழங்கி அவர்களை வாய்மூடவைத்துள்ளது ரணில் மைத்திரி அரசு.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் பெரும்பாலான வவுனியா மற்றும் கிழக்கை சேர்ந்த இரு பாராளுமன்ற உறப்பினர்கள் தவிர அனைவருக்கும் தலா ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை வழங்கி தேசிய அரசு செயற்திட்டத்திற்கு அத்திவாரமிடப்பட்டுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிறீலங்கா அரசில் பங்குபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் விபரம் முழுமையாக
எதிர்க் கட்சி தலைவர்.- இரா சம்பந்தன்
குழுக்களின் பிரதி தவிசாளர்- செல்வம் அடைக்கலநாதன்
தெரிவுக் குழு-மாவை சேனாதிராசா,த.சித்தார்த்தன்
சபைக்குழு -சீ.யோகேஸ்வரன்
நிலையியல் கட்டளை-சுமந்திரன்
பாராளுமன்ற அலுவல்கள்-சாந்தி சிறீஸ்கந்தராசா
சிறப்புரிமை பற்றிய குழு -சரவணபவன்
பொது மனுக்குழு :க துரைரட்ணசிங்கம்,சாந்தி சிறீஸ்கந்தராசா,சிவமோகன்நிலையியல் கட்டளை-சுமந்திரன்
பாராளுமன்ற அலுவல்கள்-சாந்தி சிறீஸ்கந்தராசா
சிறப்புரிமை பற்றிய குழு -சரவணபவன்
தவிசாளர் குழாம்- சித்தார்த்தன்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு :ஞாமுத்து சிறீநேசன்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழு :சி.சிறீதரன் , சாள்ஸ் நிர்மலநாதன், ச.வியாழேந்திரன்
முழுமையான விபரம்
கடந்த தேர்தலுக்குமுன்னர் சம்பந்தன் தெரிவித்த கருத்து கீழே