குற்றவாளிகளையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றவா தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தார்கள் என்பதனை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும் இ நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சிந்திக்கவேண்டுமென கோரியுள்ளார் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக்கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன்.
வடமாகாணசபையினில் அமைச்சர்களிற்கு எதிராக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள குழப்பங்கள் அதன் தொடர்ச்சியாக முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் விசாரணைக்குழவொன்று அமைக்கப்பட்டு அக்குழு இரு அமைச்சர்களிற்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்திருக்கின்றது.அத்துடன் ஏனைய இர அமைச்சர்கள் தொடர்பினில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இரு ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதிகள்இமற்றும் ஒய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரியென விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.அமைச்சர்களிற்கெதிராக குற்றச்சாட்டுக்களினை முன்வைத்து விசாரணையினை வலியுறுத்தியதில் தமிழரசுக்கட்சியே முன்னின்றது.தற்போது தமது கட்சி சார்ந்தவர்களை பாதுகாக்க அது கூக்குரலிடுகின்றது.
அதிலும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கிராமம் கிரமமாக போய் பிரச்சாரம் செய்கின்றார்.
உண்மையினில் தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தது குற்றவாளிகளையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Add Comments