2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் பிரசாரத்தின் போதே மேற்போந்த உறுதிமொழியை அவர் தமிழ்மக்களுக்கு அளித்தார்.
2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினை தீருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதில் தமிழ்மக்களுக்கு அதிக சிரமம் இருக் காதென்பதும் உண்மை. 30 ஆண்டு காலம் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழினம் இன்று தமது உரிமையை இரந்து கேட்கின்ற அவல நிலையை அடைந் துள்ளமை வேதனைக்குரியது.
இந்த அவல நிலையை ஏற்படுத்தியவர்கள் எங்கள் தமிழ் அரசியல் தலைமை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
30 ஆண்டுகால விடுத லைப் போராட்டத்தில் விடுதலைப்புலிகள் எங்கோ ஓர் இடத்தில் அரசியல் தீர்வு பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும் என்பது உண்மையாயினும் அத்தகையதோர் தீர்வை நோக்கிச் செல்லா ததன் விளைவும் போராட்டத்தின் நீண்டகால நகர்வும் உலகமயமாதலின் போக்கும் எங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மாரகச் சனியாகிப் போயிற்று.
எனினும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்திய இலங்கை அரசு இழைத்த போர்க்குற்றங்கள் ஏராளம் என்பதுடன் தமிழின அழிப்பாகவே புலிக ளுக்கு எதிரான யுத்தம் நடந்து முடிந்தது என்ற கருத்தியலும் சர்வதேசத்திற்கு உண்டு.
இவற்றையயல்லாம் ஆதாரப்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி யின் காணொலிகள் உள்ளன.
இலங்கையில் நடந்த போரைத் தடுத்து நிறுத்தாமை ஐக்கிய நாடுகள் சபை விட்ட மகா தவறு என்பதை ஒரு கட்டத்தில் அதன் செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டிருந்தார்.
இவற்றின் மத்தியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யில் இலங்கை அரசுக்கெதி ரான போர்க்குற்ற விசா ரணை கொண்டு வரப்பட்டது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீர்மானம் கூட, ஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேறிய நிலையில் இலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தில் எல்லாக் குற்றங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்து போயிற்று.
ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோர் நடத்துவது நல்லாட்சி என்ற நினைப்போடு கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கொடுத்து நல்லாட்சி தமிழர்களின் குரலை அடக்கிக் கொண்டது.
இதன் விளைவாக ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கையில் நடந்த போர்க் குற்ற விசாரணை தொடர்பில் விட்டுக்கொடுப்பு ஒன்று கனகச்சிதமாக நடந்தேறியது.
ஈழத்தமிழினத்தில் அதி கம் உச்சரிக்கப்பட்ட சொல்லாக துரோகத்தனம் என்பதையே இனங்காண முடியும். யாரும் எவருக்கும் மிக எளிதாகச் சொல்லக்கூடிய பட்டமாக துரோகி என்ற சொல் இருந்துள்ளது. இந்தச் சொல்லின் எளிமையான பயன்படுத்தலே தமிழினத்தின் பண்பாட்டை, நேர்மையை, நீதியை இரக் கத்தை அடியோடு இல்லாது செய்தது. இதன் காரணமாகவோ என்னவோ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர் பல்லாயிரக்கணக் கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பின்னர் சர்வசாதாரணமாக துரோ கத்தனங்கள் நடந்தேறலா யின. அதில் ஒன்றுதான் சர்வதேச விசாரணை என்பதை விட்டுக்கொடுத்து இலங்கை அரசுடன் இணங்கிப் போதல் என்ற முடிவாகும்.
வன்னிப் பெருநிலப்பரப் பில் நடந்த போர்க்குற்றங் களை சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும். இதற்கு நல்லாட்சி உதவவேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கேட்டிருந்தால் எங்களுக் கான உரிமையை சர்வதேச சமூகம் தானே பொறுப் பெடுத்து இலங்கை அரசு க்கு அழுத்தம் கொடுத்திருக் கும். ஆனால் தமிழ் அரசி யல் தலைமைக்கு எதிர்க்கட் சித் தலைமைப் பதவியைக் கொடுத்துவிட அட நீ என்ன செய்தாலும் நான் உங்களு க்கு உதவுவேன் என்பதாக பதவி ஆசை எல்லாவற்றையும் நாசம் செய்தது.
ஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் இருந்து நாடு திரும்புவதற்கு முன்னதாக கூறியது; மின்சார நாற்காலி யில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வைக் காப்பாற்றியுள்ளேன் என்று.
ஆக, மின்சார நாற்காலி யில் இருந்து மகிந்த ராஜ பக்வைக் காப்பாற்றினேன் என்று அமைச்சர் மங்கள கூறுவதற்குள் தமிழினத்தைக் கொன்றொழித்த ஒருவரை நல்லாட்சி காப்பாற்றியுள்ளது என்ற உண்மை அடங்கியுள்ளது.
இந்த உரைக்குப்பின் பேனும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அந்தோ! நல்லாட்சியும் தமிழர் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டி தன்றோ என்று உரக்கக் குளறியிருக்க வேண்டாமோ?
என்ன செய்வது? எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டதற்கு நன்றி செலுத்துவதற்காக அவர் பேசாமல் இருந்தாரா.
இப்போது சர்வதேச சமூகமும் எங்களைக் கை விட்டு விட்டது என்பது தெரிகிறது. தமிழீழ விடு தலைப் புலிகளின் தோல் விக்குப் பின்னர் சர்வதேச சமூகத்தின் கரத்தைப் பிடித்து நீங்கள்தான் எங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும். இலங்கை அரசை எக்காலத்திலும் நம்பமுடியாது என்று சர்வதேசத்திடம் முறையிடுவது தான் சம்பந்தரின்- கூட்டமைப்பின் கடமையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இதைச் செய் யாத சம்பந்தர் பாராளுமன்றத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை தேசியத் தலைவர் என்று புகழாரம் சூட்டுகிறார். அந்தோ அநியாயம்.
போர்க்குற்றம் தொட ர்பில் விசாரிக்கப்பட வேண் டியவருக்கு தேசியத் தலை வர் என்று பட்டம் சூட்டியது ஏன்? இங்கு தமிழ்மக்கள் தங்கள் பார்வையைச் செலுத்த வேண்டும். அட தமிழ்மக்கள் பேரவையில் இடம்பெற்ற அரசியல் கட் சிகள் மக்களால் தூக்கியயறியப்பட்டவை என்று கூறும் சம்பந்தருக்கு ஜனா திபதித் தேர்தலில் தோற்றவர் மட்டும் தேசியத் தலைவராகத் தெரிந்தது எப்படி? எல்லாம் பழைய நட்பின் பாசம்தான்.