பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதனை தடுக்க புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளது. புதிய அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்றுப் பேரவை இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. கட்சித் தாவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்ய புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பதினொரு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் இந்த புதிய சட்டமும் அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.