மீண்டும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் காணிகளை சிங்கள மக்களுக்கு கையளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் தமது வயல் காணிகளில் அவர்கள் நெற்செய்கையில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, காணி தொடர்பான பிணக்குகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு பதிலாக சிங்கள குடியேற்ற நடவடிக்கைகளினை முன்னெடுக்கும் வெலிஓயா சம்பத்நுவர பிரதேச செயலகத்தில் தெரிவிக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தனிச்சிங்கள பிரதேசம் என்பதால் தமக்கு மொழி பிரச்சினை உள்ளதாகவும் தமிழ் மாவட்ட செயலகம் முல்லைத்தீவில் உள்ள நிலையில், தம்மை சிங்கள பிரதேச செயலகத்துடன் எதற்காக இணைத்து கொள்கின்றார்கள் எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உண்மையில் 1983ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களது பூர்வீக நிலப்பரப்பான மணலாற்றினை தக்க வைக்க புதிய அரசம் முயற்சிகளை ஆரம்பித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.