இலங்கை ஒற்றையாட்சி நாடென்ற நிலையை எந்த சூழ்நிலையிலும் மாற்றப்போவதில்லை என பிரதியமைச்சர் அஜித் பெரேரா உறுதிமொழி வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
ஒற்றையாட்சி முறையை தொடருவோம் என வழங்கிய உறுதிமொழியிலிருந்து,அரசாங்கம் பின்வாங்காது.சில உள்நோக்கம் கொண்ட சக்திகள் பரப்பிவரும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு மாறாக வடக்குகிழக்கை அரசாங்கம் ஒருபோதும் இணைக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
புதியஅரசமைப்பை உருவாக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் என்ற வகையில் இவ்வாறான தகவல்கள் பொய்யானவை எவ்வித ஆதாரமும் அற்றவை என தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.