வடமராட்சி, மன்னாரில் தடைசெய்யப்பட்ட மீன்பிடியில் சிங்களவர்கள்

jafffna and mannarவடமராட்சி கிழக்கு மற்றும் மன்னார் கடற்பகுதிகளினில் அதிக அளவில் தொடரும் சிங்கள மீனவர்களின் அத்து மீறிய சட்டவிரோத கடற்தொழிலுக்கு இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக உள்ளுர் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளினைப்பயன்படுத்தி இப்பகுதிகளில் கடற்படையினரின் ஆதரவுடன் சிங்கள மீனவர்கள் மீன்கள் பிடிப்பதாக உள்ளுர் மீனவர்கள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுப்பதற்கு எவரும் சட்டரீதியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு கடற்படை எவ்வகையில் ஆதரவளிக்கின்றரென்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila