கடந்த கால ஆட்சியின் போது அரச ஒப்பந்தங்களுக்காக கொலைகளை செய்தவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்படும் போது அவர்களை படையினர்களாக சித்திரித்து காப்பாற்ற முயற்சிப்பது உண்மையான படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகும் என பிரஜைகள் அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அரசியல்வாதிகளது ஒப்பந்த கொலைகார்களை படையினர் என கருத முடியாது என பிரஜை அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
அந்த ஒப்பந்த கொலையாளிகளை படையினர் எனக் கருதுவது உண்மையான படையினருக்கு செய்யும் அவமதிப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
படையினரில் பெரும்பாலானவர்கள் உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவையாற்றினர்.
ஆனால், அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்காக கொலைகளை செய்து சுறாக்களுக்கு போட்டவர்களை படையினர் எனக் கூறுவது உண்மையான படையினருக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாகும்.
முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்றால், தற்போதைய அரசாங்கம் செய்ய போகும் நல்லாட்சியின் முன்னுதாரண நடவடிக்கை என்ன?.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதை படையினருக்கு எதிரான அடக்குமுறையாக சித்தரிக்கின்றார்.
இதனால், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சம்பந்தமாக மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும்.
பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் குறித்து மாத்திரமல்ல, நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், லசந்த விக்ரமதுங்க போன்றவர்களின் கொலைகள் மற்றும் அந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என சுதந்திர ஊடக அமைப்பு கூறியுள்ளதன்படி 31 ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்து என்பது பற்றியும் விசாரணை நடத்தி தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும்.
கம்மன்பில போன்றோரின் கருத்துக்களும் நடத்தைகளும் உண்மையான படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகும் எனவும் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.