ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் ஒருவருட நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நால்வர் கொழும்பு செல்லவுள்ளனர். இதனால் நாளை எட்டாம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களிற்கிடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு மாதத்தின் முதலாவது வெள்ளிக்கிழமைகளில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் உறுப்பினர்களுக்கு மிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. தற்போது முதலமைச்சருக்கும் உறுப்பினர்கள் ஒரு சிலருக்குமிடையில் ஏற்பட்டு வருகின்ற கருத்து முரண்பாடுகளை அடுத்தே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என உறுப்பினர் ஆனல்டினால் முதலமைச்சரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு அமைவாக நாளை எட்டாம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக கலந்துரையாடல் மண்டபத்தில் காலை ஒன்பது மணியளவில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
எனினும் அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருவருட பதவியேற்பு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தாம் கொழும்பு செல்லவுள்ளதாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து முதலமைச்சருடனான சந்திப்பின் காலம் மாற்றம் செய்யப்பட்டு எதிர்வரும் பதினோராம் திகதி சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொழும்பு சென்று மைத்திரியின் நிகழ்வில் பங்கேற்கவுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் நால்வரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டிலேயே செல்லவுள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் நல்லாட்சி என்று கூறிவிட்டு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் அளிக்காத புதிய அரசின்,
முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் உறுப்பினர்கள் ஒரு சிலர் தன்னிச்சையாக கலந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்வாறானவர்களை மக்கள் இங்கங்கண்டு கொள்ள வேண்டும் எனவும் சக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைத்திரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிய முடிகின்றது.