சர்வதேசத்திற்கு தேவையான வகையில் அரசியல் சாசனம் மாற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றவோ புதிய அரசியல் சாசனத்தை அறிமுகம் செய்யவோ தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடக அமச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்றின் அவசியம் எழுந்துள்ள போதிலும் அது சர்வதேசத்தின் தேவைக்கு அமைய உருவாக்கப்படாது என ஜனாதிபதி மேலும் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.