வரும் 11ம் திகதி தொடக்கம், நான்கு நாட்கள் அவர் சீனாவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறவே அவர் பீஜிங் செல்வதாகக் காரணமும் கூறியிருக்கிறார் மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது, ஏழு தடவைகள் சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
ஆட்சியிலிருந்தபோது அவரது சீனப் பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறன. இப்போதும் கூட அவரது சீனப் பயணம் அரசியல் மட்டங்களில் புருவத்தை உயர வைத்திருக்கிறது.
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக வெளிநாட்டுக்குச் செல்லப் போகிறார் மஹிந்த ராஜபக்ச.
இதுவரையில் அவர் வெளிநாடு ஒன்றுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கவில்லை.
ஆனால், தான் உள்ளிட்ட 24 பேருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சமகாலத்தில்தான், மஹிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் பற்றிய செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சீனாவுக்கான பயணம் ஒன்றை சில வாரங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்தே, மஹிந்த ராஜபக்ச இப்போது சீனப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட தருணங்களில், பீஜிங்கில் கொடுக்கப்பட்டளவு முக்கியத்துவம், இப்போதும் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தளவுக்கும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலோ அதிகாரத்திலோ இல்லை. ஏன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் கூட இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அவர் இப்போது பதவியில் இருக்கிறார்.
இருந்தாலும், பீஜிங் செல்லும் மஹிந்த ராஜபக்சவை, சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உயர்மட்டச் சந்திப்புகள் இடம்பெறும் என்றே தகவல்கள் கூறுகின்றன.
இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகள் ஒன்றும், மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளர் கூறுவது போன்று வெறுமனே நன்றி கூறுவதற்காக என்பதை எவராலும் நம்ப முடியாது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்பட்ட நெருக்கம் சாதாரணமான ஒன்று அல்ல.
அதன் காரணமாக இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா பில்லியன் டொலர் கணக்கில் நிதியையும் கொட்டியிருக்கிறது.
சீனா அவ்வாறு நிதியைக் கொட்டியது, மஹிந்த ராஜபக்சவின் மீதான நட்பினாலோ, பாசத்தினாலோ அல்லது அவருடனான நெருக்கத்தினாலோ அல்ல.
இலங்கையில் சீனா முன்னெடுத்த திட்டங்கள் எந்தளவுக்கு இலங்கைக்கு பயனளித்ததோ அதேயளவுக்கு சீனாவுக்கும் கைகொடுத்தது.
இருநாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய திட்டங்களைத் தான் தாம் முன்னெடுத்ததாக சீனா அவ்வப்போது மறைக்காமல் கூறி வந்திருக்கிறது.
எவ்வாறாயினும், இலங்கையில் சீனா முதலீடு செய்த திட்டங்கள் அனைத்தும், இலங்கைக்கு சாதகமானது என்றோ, இலங்கையின் அபிவிருத்திக்கு பங்களித்தது என்றோ கூற முடியாது.
உதாரணத்துக்கு அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள், இலங்கைக்கு கடன்சுமையை ஏற்படுத்தியவை தான்.
இவற்றினால், இலங்கை நன்மையடையவில்லை. ஆனால், சீனா தான் கொடுத்த கடனை வட்டியுடன் சேர்ந்து வசூலித்து வருகிறது.
வட்டி வீதத்தைக் குறைக்குமாறு புதிய அரசாங்கம் சீனாவிடம் பல முறை வேண்டுகோள்களை விடுத்த போதிலும், அதற்கு பீஜிங் இணங்கவேயில்லை.
இந்தத் திட்டங்கள், மஹிந்த ராஜபக்சவின் காலத்திலும் வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இப்போதும் அப்படித்தான்.
கொழும்புத் துறைமுகத்தின் வருமானத்தை வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடனை அடைத்து வருவதாக அண்மையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியிருந்தார்.
ஆனாலும், சீனா கட்டிக்கொடுத்த துறைமுகம், விமான நிலையம் என்ற பெயரும், மஹிந்த ராஜபக்சவின் பெயரும் மட்டும் இலங்கையில் நிலைத்திருக்கிறது.
இதற்கு நன்றி கூறுவதற்காகவே மஹிந்த ராஜபக்ச சீனா செல்கிறார்.
சீனப் பயணத்துக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ச தீவிர அரசியல் களத்தில் இறங்குவார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே தீவிர அரசியல் களத்தில் தான் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
அவர், பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய போதே, தீவிர அரசியலுக்குள் நுழைந்து விட்டார்.
ஆனாலும், அவரால் அதிகபட்சமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தான் பிடிக்க முடிந்தது.
அது, அவரது அதிகாரப் பசியைத் தீர்ப்பதற்கோ அல்லது சீனாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கோ போதுமானது அல்ல என்பது தெளிவான விடயம்.
மஹிந்த ராஜபக்ச போன்ற தனது நெருக்கமான விசுவாசிகள், அதிகாரமற்றவர்களாக முடங்கிக் கிடப்பதை சீனா ஒரு போதும் விரும்பாது.
அதனால் அவரை எப்படியாவது தீவிர அரசியல் களத்தில் இயங்கும் ஒருவராக மாற்ற சீனா முயற்சிக்கலாம்.
அதற்கான முதற்படியே மஹிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் என்று கூட அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலான பேச்சுக்கள் உள்ளன.
மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பலவற்றை, தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தி வைத்திருக்கிறது.
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீனாவின் திட்டங்களை மீளத் தொடங்குவதற்கு, அனுமதி அளிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே கூறியிருந்தாலும், அவை சீனாவுக்குத் திருப்தியளிப்பதாக இருக்காது.
ஏனென்றால், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் சீனாவுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலப்பகுதி, உரிமையாக வழங்கப்படாது என்பதில் தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
கொழும்புத் துறைமுக நகரில் 20 ஹெக்ரெயர் நிலப்பகுதியை உரிமையாகப் பெறுவது தான், சீனாவின் மூலோபாய நலன்களுக்கு முக்கியமானது.
அதனை விட்டுக்கொடுத்து தான், 1.4 பில்லியன் டொலர் திட்டத்தை தொடர வேண்டிய நிலையில் சீனா இருக்கிறது.
புதிய அரசாங்கம், பதவியேற்ற பின்னர், இலங்கையுடன் உறவுகளைத் தொடர்வதிலோ, வணிக மற்றும் முதலீடுகளைத் தொடர்வதிலோ பெரியளவிலான சிக்கல்கள் இல்லாவிட்டாலும், பாதுகாப்பு மூலோபாய நலன்களை உறுதிப்படுத்துவதில் சீனாவுக்குப் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில், சீனாவின் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தும் நண்பனாக இருந்த மஹிந்த ராஜபக்ச, தோற்கடிக்கப்பட்டு மூலையில் முடங்கிக் கிடப்பதை அந்த நாடு ஒரு போதும் விரும்பாது.
மீண்டும் மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வராமல், சீனாவுக்குச் சாதகமான நிலை ஒன்றை, இலங்கையில் மீளவும் ஏற்படுத்த முடியாது.
எனவே, மஹிந்த ராஜபக்சவை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கவே சீனா விரும்பும்.
கடந்த ஒக்டோபர் மாத முற்பகுதியில் சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தை இழந்த பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் அவரை சந்தித்துப் பேசியது அதுவே முதல் சந்தர்ப்பமாக இருந்தது.
அப்போதே இந்தச் சந்திப்புத் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த பின்னரும், அவரைக் கைவிட சீனா தயாராக இல்லை என்பதை அந்தச் சந்திப்பு எடுத்துக் கூறியிருந்தது.
இப்போது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொள்ளும் பயணம், அவருக்கும் சீனாவுக்கும் இடையிலுள்ள நெருக்கத்தை இன்னும் அதிகம் வெளிப்படுத்தும் எனலாம்.
இது, சீன -– இலங்கை உறவுகள் என்பது, நாடுகளுக்கிடையிலான உறவின் தன்மைகளின் மீது கட்டியெழுப்பப்பட்டதா அல்லது தனிநபர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலையும் அளிப்பதாக இருக்கும்.
-ஹரிகரன்