
இந்த மாதிரி வீட்டை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கில் வீடுகளை அமைக்க இணங்குவதாக, அமைச்சர் சுவாமிநாதனுக்கு, இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், சீன நிறுவனம் வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணை போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விடயத்தில் இந்தியாவும் சீற்றமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
இது ஒரு சீனாவின் திட்டம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஏனைய விபரங்களும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் இப்போது தான், இது ஒரு சீனத் திட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.