பிரபாகரனால் மட்டுமே நாட்டை ஆளத் தெரியும்! வெளிநாட்டு இராஜதந்திரிகள் கருத்து!

புலிகளின் தலைவர் பிரபாகரனால் மட்டுமே ஓரு நாட்டை நிர்வாகத்தையும் ஆளத் தெரியும் ஏனைய தமிழர்களால் சிறு சபையைக்கூட ஆளமுடியாது என வடமாகாண சபையின் குழப்பநிலை தொடர்பில் வெளிநாட்டு இராஜயதந்திரிகளின் கருத்தாக உள்ளதாக சிவஞானம் சிறிதரன் பா.உ. தெரிவித்தார்
வடக்குமாகாண சபையின் 45வது சபை அமர்வு இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற போது திட்டமிட்ட குழப்பங்கள் நடைபெற்றதுடன் 46வது சபை அமர்வில் இன்று அத்தகைய குழப்பங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் கேட்ட போதே   அவர் இதனைத் தெரிவித்தார்
வடக்கு மாகாண சபையின் 45வது சபை அமர்வு நடைபெற்ற போது தமிழ் மக்கள் எதற்காக எம்மை தெரிவு செய்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாத வடமாகாண சபையின் ஒருசில உறுப்பினர்களும் அவர்களுக்கு பின் நின்று செயற்படுபவர்களும் தமிழ் மக்களுக்கு கிடைக்க இருக்கின்ற நல்ல சந்தர்ப்பத்தை குழப்புவதற்கு ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றார்கள்.
மாகாணசபை அதிகாரங்கள் எவ்வாறு கிடைக்கப் பெற்றது, எத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அப்போது இருந்த தழிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் இன்றைய தலைவர் இரா சம்பந்தன் உட்பட இதனை நிராகரித்தார்கள்.
இத்தகைய சூழலில் தான் பல முயற்சிகள் எதிர்பார்ப்புக்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் நியமிக்கப்பட்டார் தேர்தலில் போட்டியிட்ட போது மக்கள் பெருவாரியாக தமது வாக்குகளை பயன்படுத்தினார்கள்.
பல இழப்புக்கள் ஏதிர்பார்ப்புக்கள் மத்தியில் இருந்த மக்களுக்கு தற்போதைய மாகாண சபையின் செயற்பாடுகள் சொற்பிரயோகங்கள் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்புக்கள் உள்ள மக்களுக்கு அவர்கள் எதிர்நோக்கும் அடுத்த கட்டத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு செயற்படுபவர்கள் இவர்களுக்கு பின்னால் இருப்பவர்களில் எத்தனை பேர் மக்களின் வலியை தெரிந்திருக்கிறார்கள், போராடியிருப்பார்கள் தமது இழப்புக்களை சந்தித்து இருப்பார்கள்.
குழப்ப சக்திகளுடன் சபையை குழப்பாது மாகாணசபையினை வெளிப்படைத் தன்மையுடன் தற்போதைய முதலமைச்சர் அமைச்சர்களுடன் இணைந்து சபையின் ஆயுட்காலம் வரை செயல்படுத்த வேண்டும். அதுவே மக்களுக்கான செயற்பாடுகளின் முதல்படியாக இருக்கும் என்றார்.
 

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila