
இன்று நண்பகல் 12மணியளவில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஒன்றுகூடிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நாம் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல, சிறை என்ன குற்றவாளிகளின் உயர் பாதுகாப்பு கூடமா?, வித்தியாவிற்கு விடை கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?, பாலியல் குற்றவாளிகளுக்கு புலிகள் காலத்தில் வழங்கிய தண்டனையே சிறந்தது, போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.