உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பிலும் தமிழர்களுக்கான தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்டால் தனித் தமிழீழத்தையே மீண்டும் கோருவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும் என தெரிவித்த பொது அமைப்புக்களின் மக்கள் பிரதிநிதிகள், இதிலுள்ள நியாயப்பாடுகளை புரிந்து கொண்டு சர்வதேச நாடுகள் ஆவன செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற் றையதினம் இரண்டாவது நாளாக நடைபெற்ற அரசியலமைப்பு சீர்தி ருத்தங்கள் தொடர்பாக மக்கள் கருத்துப்பெறும் குழுவிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் மேற்படி விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமும் தமிழர் களுடைய உரிமைகளை தர மறுத்தால், சர்வதேசம் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். அது சிங்கள வர்கள் தமிழ் மக்களுக்கு என்றுமே உரிமைகளை வழங்கமாட்டார்கள் என்பதாகும்.
இந்த முறையும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு அடிகோலும் எனவும் மக்கள் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை மிக நீண்ட காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சியின் பின் னர் சிங்களவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட எமது தேசம் இன்றும் சிங்களவர்களுக்கு அடிமையானதாகவே இருந்து வரு கின்றது.
எமக்கான உரிமைகள் தரு வதாக காலம் காலமாக ஆட்சியாளர்களால் கூறப்பட்டு தொடர்ந்தும் ஏமாற் றப்பட்டே வந்தோம்.
தமிழ் மக்களுக்கு உரிமைகள் தருவதாக கூறி செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் ஒப்பந்தம் செய்தவர்களாலேயே கிழித்தெறியப்பட்டன.
இன்றும் எதிர்கட்சியில் உள்ள எமது அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டு கொண்டுள்ளதனை நாங்கள் பார்க்கின்றோம். எங்கள் தலைவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.
நாட்டில் இதுவரை கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு முறைகளில் தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படாமலே இருந்து வந்துள்ளது.
தற்போது நாட்டில் புதிய அரசு ஆட்சியில் உள்ள நிலையில், மீண் டும் ஒரு புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரவுள்ளதாக கூறி அதற் கான கருத்துக்களையும் எங்களிடம் கேட்டு வந்துள்ளனர்.
இந்த அரசியல் அமைப்பில் நாங்கள் காலம் காலமாக வலியுறுத்தி வரும் சமஸ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைவு போன்றவற்றையே இப்போதும் உங்களிடம் வலியுறுத்தியுள்ளோம்.
எமது கருத்துக்கள் பெறப்பட்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது எமக்கான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்.
கடந்த கால அரசுகள் மேற்கொண்ட ஏமாற்று நடவடிக்கைகள் போன்று இம்முறையும் இந்த அரசும் எம் மிடம் கருத்துக்களை பெற்று விட்டு எம்மை ஏமாற்றும் செயலில் இறங்கு மாயின், எமது விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு உதவிய சர்வதேச நாடுகள் எமக்கான தனி நாடான தமிழீழத்தை பெற்று தர வேண்டும்.
மாறாக சர்வதேசமும் இலங்கை அரசும் எம்மை ஏமாற்றினால் மீண் டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு அடிகோலும், இதனை அனை வரும் புரிந்து கொள்ள வேண்டும். எமது தமிழ் இளைஞர்கள் தாமாக விரும்பி ஆயுதம் ஏந்திப் போராட வில்லை.
எமது மக்கள் அரசியல் தலைவர் களின் வழிகாட்டுதலிலேயே போராடினார்கள்.
ஆகையால் நாங்கள் எமது உரிமைகளுக்காகவே ஆயுதம் ஏந்தினோம். எமது உரிமைகள் மறுக்கப்படா விட்டால் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றிருக்காது.
இந்த இலகுவான எடுகோளை சர்வதேசமும், தென்னிலங்கை அரசும் தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தவிர்க்க வேண்டும் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் எடுத்தக் கூறப்பட்டுள்ளது.