தமது விடுதலை குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும், நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தங்கியிருந்து சொல்லெண்ணா துன்பங்களை அனுபவித்து வரும் தாம் விடுதலையை வலியுறுத்தி உயிரைத் துச்சமென மதித்தே இவ்வாறான போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அரசியல் கைதிகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்க்ப்படுகின்றது.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தினை இன்று முதல் ஆரம்பித்துள்ளமையினை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் ஆதவனின் செய்திப்பிரிவிற்கு உறுதிப்படுத்தினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அநுராதபுரம் சிறையிலுள்ள இரண்டு தமிழ் கைதிகள் நேற்று(திங்கட்கிழமை) முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.