அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா தனக்கு இது தொடர்பில் ஏதும் தெரியாதெனவும் இதுவரை சிவமோகனை தமிழரசுக்கட்சியில் இணைக்கவில்லையெனவும் மறுதலித்துள்ளார். ஆயினும் தங்கள் முன்னிலையில் தானே இணைந்ததாகக் கூறப்படுகின்றதேயென செல்வம் எதிர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கூட்டமைப்பில் டெலோ மட்டுமே தமிழரசுடன் இணங்கி செயற்படுகின்றது. ஆனால் தமிழரசோ டெலோவையும் உடைக்க முற்படுவதாக அப்போது செல்வம் அடைக்கலநாதன் குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் இரா.சம்பந்தன் மௌனம் காத்திருந்தார்.
இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்த ஈபிஆர்எல்எவ் உறுப்பினர் சர்வேஸ்வரனுடன் முரண்பட்டு சுமந்திரன் கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகின்ற போதும் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.