பாடப்பட்டுக் கொண்டிருக்கும் போதே சிங்கள தேச பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நெஞ்சுருகி கண்ணீர் விட்டதாக நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
ஆங்கிலத்தில் அடிபணிவு அரசியலை வடிக்கும் ஒரு பத்தி எழுத்தாளரும் கூட தனது வலையில் தனக்கு கண்ணீர் பெருகியதை தான் விம்மியழுததை பதிந்து இருந்தார்.
இதனை விட இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நமோ நமோ மாதா தமிழில் பாடப்பட்டது தமிழுக்கே பெருமை என்றளவில் கூட எழுதவும் கூறவும் தலைப்பட்டு விட்டார்கள்.
பாவம் தமிழ். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தண்டியலங்காரத்தில் ' ஓங்கலிடை பிறந்து உயர்ந்தோர் தொழ விளங்கி என்று ஆரம்பித்து தன்னேரில்லாத தமிழே என்று புகழப்பட்ட தமிழுக்கு,
"வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழி ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! "என்று பாரதி வானமளந்த அனைத்தையும் அளக்கக்கூடிய வலிமையும் செழுமையும் நிறைந்த தமிழ் என்று பாடிப் போற்றிய தமிழுக்கு,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்னரே தான் எழுதிய அதிகாரங்களில் ஒன்றுக்கு படைச்செருக்கு என்று பெயர் வைத்து 'கான முயல் எய்ந்த அம்பினில் யானை பிழைத்த வேந்தல் இனிது" என்று எப்போதும் பெரியதை இலக்கு வை..தோற்பினும் அது பெருமை என்று வள்ளுவர் சொன்ன தமிழுக்கு,
எல்லாவற்றிலும் மேலாக எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த பல ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்று நீட்சியும், எந்த மொழியின் இலக்கணத்துடனும் கலந்திடாத வேர் இலக்கணமும், காப்பியங்களும் நிறைந்த ஒரு செம்மொழியான தமிழுக்கு,
காலிமுகத்திடலில் இனப்படுகொலையாளிகளுக்கு முன் நின்று நமோ நமோ மாதாவை தமிழில் பாடியது பெருமை என்று யாராவது நினைத்து உருகினால் அவர்களின் அடிமை புத்திக்கு உறைக்க சொல்ல தமிழில்கூட வார்த்தை இல்லை..
முள்ளிவாய்க்காலில் சொந்த இனம் லட்சம் கொல்லப்பட்டு சிதைக்கப்பட்டதை பார்த்தும் வராத கண்ணீர் நமோ நமோ மதா தமிழில் பாடப்பெறும் போது மட்டுமே பீறிட்டு மடை உடைக்கின்றது என்றால் அந்த கிஸ்றீரியா நோய் தன்மைக்கு நாம் சொல்ல என்ன இருக்கிறது..
அது ஒரு பக்கத்தில் கிடக்கட்டும். நான் அடிமை என்பதை அவனது சிங்களத்தில் ராகத்துடன் பாடினால் என்ன அதனையே தமிழில் மெட்டு போட்டு ராகத்துடன் ஆலாபனை செய்தால் என்ன எல்லாம் ஒன்று தான். கன்னத்தில் அடி வாங்கிவிட்டு முன்னர் மாத்தயா என்று சொன்னதை இப்போது ஐயா என்கிறோம் அவ்வளவே..
தமிழில் பாடப்பட்டது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் அது இது என்றெல்லாம் எழுதி குவிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்க நியாயமில்லை.
இதன் மூலப்பாடலான சிங்கள மொழியின் நமோ நமோ மாதாவை எழுதிய கவிஞனையே கொன்ற தேசியகீதம் தான் சிங்கள தேசத்தினது என்று .நமோ நமோ மாதா சிங்கள தேசத்தின் தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 52ம்ஆண்டின் பின்னர் சிங்களதேசத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், வெள்ளம், புயல் என அத்துடன் இந்த நமோ நமோ மாதா தேசியகீதமாக இசைக்கப்பட்ட பின்னர் சிங்களதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நிலையின்மை எல்லாவற்றுக்குமான பழி இந்த நமோ நமோ மாதா மீதே போடப்பட்டது.
இந்த பாடல் ந சத்ததுடன் ஆரம்பிப்பதாலும் க வரி வருவதாலும் அதன் நெடில் சத்தங்கள் அமங்கலம் என்று பழி சுமத்தப்பட்டது.
சிங்களத்தின் மிகப்பெரும் இனவாதியும் போர் என்றால் போர் என்று தமிழர்களை நோக்கி அறைகூவல் விட்டவருமான ஜே.ஆர் ஜெயவர்த்தனா நிதி அமைச்சராக இருந்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க அப்போதைய உள்நாட்டு அமைச்சர் எட்வின் சமரக்கோன் தலைமையிலான குழுவால் தேசியகீதமாக 1952ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நமோநமோ 61ல் மாற்றத்துக்கு உள்ளானது.
அதுவும் அதனை எழுதிய ஆனந்த சமரக்கோனின் எதிர்ப்பையும் மீறி. ஆனந்த சமரக்கோன் எழுதிய நமோ நமோ பாடலின் முன்பாக சிறீலங்கா மாதா என்ற சொல் சேர்க்கப்பட்டதை எதிர்த்து மனமுடைந்து ஆனந்த சமரக்கோன் 62ல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எழுதியவனையே கொன்று போட்ட துன்பியல் ராகத்தில் தான் நமோ நமோ இருக்கிறது.
இந்த நமோ நமோ மாதா இப்போது தமிழில் பாடப்பெற்றது ஏதோ மைல் கல் என்பது போன்றும் சிங்கள தேசத்தின் நற்காரியங்களின் மிக ஆரம்பம் இது என்றும் பிரச்சாரம் சிங்கள தரப்பாலும் தமிழ் பாணபத்திர ஓணாண்டிகளாலும் மேற்கொள்ளப்படுகின்றது.
நான் அறிந்தவரையில் தமிழர் தேசத்தில் சிங்கள படைகளின் ஆயுதப் பாதுகாப்பு இன்றி எந்தவொரு பொது இடத்திலும்கூட சிங்கள தேசக்கொடி பறக்கவே முடியாத நிலைதான் எப்போதும்.
சிங்கள தேசிய கீதம்கூட மெதுமெதுவாக வழக்கொழிந்து வழக்கொழிந்து இறுதியில் அற்றே போய்விட்டிருந்தது.
ஆனால் 2010 இறுதியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் உரையாற்ற என்று வந்து தமிழர்களின் மகத்தான எதிர்ப்பால் தோல்வியில் தலைகுனிந்து, ஒக்ஸ்போர்ட் உரையும் ரத்தாகி அவமானத்தின் உச்சியில் நாடு திரும்பிய மகிந்தரை குளிர்விக்க எடுத்த முயற்சிதான் தமிழில் சிங்கள தேச கீதத்தை பாடுவதை தடை செய்யும் எத்தனம்.
அதுகூட அப்போது சட்டவாக்கமாக நிறைவேறாது போனாலும்கூட எல்லா அமைச்சுக்கும், பாடசாலைகளுக்கும், கூட்டுதாபனங்களுக்கும் தமிழில் பாடக்கூடாது என்று சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டது தெரிந்ததே.
அதற்கு மாற்றாகவே இப்போது தமிழில் பாடி இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றுக்காகவும் இல்லை.
மேலும் பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை அது இது என்று சர்வதேச அழுத்தங்களில் இருந்து ஓரளவு தளர்ந்து கொள்ள இந்த தமிழில் நமோ நமோ பெரிதும் உதவும் என்பது சிங்கள இராஜதந்திர பட்டறிவு.
தமிழர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு தமது மொழி மீது, அதன் தொன்மை அதன் இலக்கிய செழுமை என்பன மீது உயரிய மரியாதையும் பெருமிதமும் உண்டு என்பதால் தமிழுக்கு தேசியகீதத்தில் சம இடம் என்ற பொறியை சிங்களம் விரித்துள்ளது.
இந்த மொழி வலையை தமிழர்கள் அறியாதவர்கள் அல்ல. ஏற்கனவே கருணாநிதியும் இதனை போன்ற ஒரு நாடகத்தினை நடாத்தியதை அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள் தமிழ்மக்கள்.
2009 இனஅழிப்பின் போது அதனை தடுத்து நிறுத்தாதது மட்டும் அன்றி இன அழிப்புக்கு எதிராக தமிழகம் எழுச்சி கொண்ட போது அதனை நசுக்கிய கருணாநிதி அந்த கறையை போக்குவதற்காக தமிழுக்கு செம்மொழி மாநாடு என்று 2010 யூனில் நடாத்திய போது மிக இயல்பாக தமிழ் மக்கள் அதனை நிராகரித்து நின்றது ஒரு பெரும் வரலாறு.
அதனை ஒத்த ஒரு நடாகமாகவே இப்போது தமிழ்மொழியில் நமோ நமோ மாதா தேசியகீதம் என்ற ஒன்றை சிங்களமும் அதன் ஒட்டுண்ணியாக வாழும் தமிழ் அரசியல்வாதிகளும் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இவர்கள் ஒன்றே ஒன்றை மறந்து போகிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழர்களின் பிரச்சனை என்பதன் ஆரம்ப புள்ளியாக 50களில் சிங்களம் மட்டும் சட்டம் இருந்தது என்பது உண்மைதான்
எனினும் தமிழர்களின் தேசிய பிரச்சனை என்பது வெறுமனே மொழி என்பதையும் தாண்டி ஏறத்தாழ 50வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதை சிங்களம் எவ்வளவு பாடம் படித்தும் இன்னும் புரிந்துகொண்ட பாடில்லை.
தமிழர்களின் பிரச்சனையின் தீவிரம் கட்'டுநாயக்க விமான நிலையத்தை கந்தக புகைகாடு ஆக்கிய போதும் கூட இது புரிந்து இருக்கவில்லையா..
தமிழர்களின் பிரச்சனை என்பது அவர்களின் தேசிய இன உரிமை சார்ந்தது. அவர்களின் பராம்பரிய நிலத்தினில் யார்க்கும் குற்றேவல் புரிந்திடாமல் அவர்கள் வாழும் வாழ்க்கை முறைமையை அவாவி நிற்கின்றது.
அதனை வெறுமனே ஒரு 2 நிமிட 28 செக்கன் தமிழ் நமோ நமோ மாதா பாடலினால் நிரவிவிட முடியாது என்பதை சிங்களம் உணர வேண்டும்.
சர்வதேசத்தை, அதனிலும் முக்கியமாக நடக்க இருக்கும் ஜெனீவா அமர்வுகளை கணக்கிலெடுத்து ஒரு அஸ்திரத்தை சிங்களம் லாகவமாகவே எய்துள்ளது.
தமிழர்கள் நிலத்தில் இன்னும் தொடரும் நில ஆக்கிரமிப்பு, திடீரென கண்டெடுக்கப்படும் சடலங்கள், ஆயுதப்படைகளால் வலிந்து மேற்கொள்ளப்படும் தமிழ் பகுதி போதை நுகர்வு, இயல்பு நிலை இன்னும் தோன்றிடாத நிலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை இன்னும் விடுவிக்காத படைத்தரப்பு என்று எதுவுமே தீர்க்கவோ விரும்பாத அரசு அதனை மறைத்து தேசிய நல்லிணக்கம் தோன்றி இருக்கு என்று காட்ட கொண்டு வந்த மாயமானே தமிழில் நமோ நமோ மாதா.
சிங்களதேச சுதந்திரதினம் என்பது தமிழர் தாயகத்தில் அரசு நிகழ்வுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்ததை தவிர தமிழர்கள் எவரையும் சிறீலங்கா சுதந்திர தினம் என்பது ஒரு பொருட்டாக கருத வைத்ததாக இம்முறையும் இல்லை-எப்போதும் இல்லை.
தமிழுக்கு இது பெருமை என்பதையும் தமிழர் எவருமே ஒரு பொருட்டாககூட நினைத்தது இல்லை. அவர்களுக்கு தெரியும் தமிழுக்கு இருக்கின்ற தொன்மைகளுடன் தமிழுக்கு இருக்கின்ற பெரிய பெருமை அது மில்லர்கள் பேசிய மொழி, அது திலீபன் பேசிய மொழி, அது ஆயிரமாயிரம் எம் தேசப் புதல்வர்கள் களத்தினில் பேசிய மொழி, எல்லாவற்றிலும் மேலாக அது எங்களின் தலைவன் பேசிய மொழி..அதுதான் தமிழுக்கு பெருமையே தவிர நமோ நமோ மாதாவை தமிழில் பாடியது அல்ல.
எங்களுக்கென்று ஒரு தேசம் நிச்சயமாக ஒருநாளில் உருவாகும். அந்த நாளில் என் தேசத்து சின்னஞ்சிறுசுகள் வானில் பறந்திடும் தாயக கொடியை பார்த்தபடியே எங்கள் தேசிய கீதத்தை பாடிடுவார்கள். அன்றுதான் தமிழ் அழகு பெறும்.
- ச.ச.முத்து
ilamparavai@hotmail.com