அரசியல் கைதிகளை விடுவிக்க முதலமைச்சர் மீண்டும் கோரிக்கை!

vignewswaran_cm_north.jpgசந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.யாழ். வலிகாமத்தில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் பல ஆண்டுகளாக இருந்த காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மற்றும் 700 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வினில் அவர் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.

எமது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் பற்றி ஒரு வார்த்தை. எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றேன். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையின் வரலாற்றில் சாதனைகள் படைத்த ஜனாதிபதி என்று உங்களை சரித்திரம் அடையாளம் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila