இரண்டு குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டவர்களின் நிரல் முறையில் வரைவு படமொன்றை அமைத்த அரசாங்க புலனாய்வு பிரிவு, அந்த வரைவுக்கு அமைய ராஜபக்சகளுக்காக வந்தவர்களின் எண்ணிக்கை குறைவானதெனவும் அவர்களின் பிரச்சாரம் போலியானதெனவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ராஜபக்சகளின் கூட்டத்தில் கலந்து கொண்டமை கட்சியின் முக்கிய நிறுவனமான மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு சவால் விடுக்கும் வகையிலான செயற்பாடு எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நன்மதிப்பு மற்றும் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தின் உண்மை தகவல்கள் அனைத்தையும் துல்லியமாக ஆய்வு செய்து, கட்சியின் அரசியலமைப்பிற்கமைய அவசியமான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி உறுப்பினர்கள் 37 பேர் ஹைட் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். சி.பி. ரத்நாயக்க, குமார வெல்கம, விமலவீர திசாநாயக்க,சிறியானி விஜேவிக்கிரம, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ, ஷேஹான் சேமசிங்க, எச்.ஏ.முத்துக்குமாரண, வீரகுமார திசாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜயந்த சமரவீர, ஜயந்த சமரவீர, கனக ஹேரத், தாரக பாலசூரிய, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, சிசிர ஜயகொடி, இந்திக அனுராதா, மோகன் டி சில்வா, சி.பி. ரத்நாயக்க, சனத் நிஷாந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாலிந்த திசாநாயக்க, வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரே குறித்த பேரணியில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
ராஜபக்சகளின் திட்டம் பிசுபிசுப்பு!
Related Post:
Add Comments