இராணுவத்திலிருந்து ஆட்குறைப்புச் செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார். இராணுவத்தினரை சிறையில் அடைத்துவிட்டு விடுதலைப் புலிகளை வெளியில் விடுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாம் அப்படிச் செய்யவில்லை.
முன்னைய அரசாங்கத்தில்தான் இராணுவத்தினர் கூலிப்படைகளாகவும் வீட்டு வேலை செய்பவர்களாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர்.
ஆனால் தற்போது அப்படியில்லை. இப்போது அவர்களுக்குரிய மரியாதையுடன் அவர்கள் உள்ளார்கள். அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது.
சட்டம் அனைவருக்கும் சமன். ஆகையால் குற்றமிழைத்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள். அப்படி குற்றமிழைத்த இராணுவத்தினர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குட் படுத்தப்படுவார்கள்.
நீதிமன்ற நடவடிக்கைகளில் நாம் தலையிடமுடியாது.
அனைத்துலக ரீதியில் இலங்கை இராணுவத்துக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படப் போவதாக தெரியவருகின்றது. அப்படி நினைக்கவேண்டாம். நாம் இராணுவத்தினரைப் பாதுகாக்கவே கூட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தினோம். இதனை அறியாதவர்கள்தான் எம்மைக் குறை கூறுகின்றனர்.
போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் எமது சட்டத்தில் தலையிடமுடியாது. தேவையானால் அவர்கள் கண்காணிப்பாளர்களாக மட்டும் பங்குபற்றமுடியும். அதுகூட இன்னமும் முடிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.
இறுதியில், இராணுவத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எதனையும் நாம் செய்ய வில்லையெனவும், அத்துடன் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.