இனப்பிரச்சனைத் தீர்வு நீக்கப்பட்ட புதிய அரசியலமைப்புத் தீர்மானம் பனங்காட்டான்

இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக நேர்க்கோட்டில் வந்து சிக்குண்டு நிற்கும் மூன்று பிரச்சனைகளைச் சமகாலத்தில் நோக்க வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கு இணைந்த தீர்வென்று தமிழர் கூட்டமைப்பு வேண்டி நிற்கும் கோரிக்கையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முழுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பது முதலாவது.
புதிய அரசியல் நிர்ணய சபையை உருவாக்கும் தீர்மானத்தின் முன்னுரையிலிருந்த, ‘தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வைக் கண்டறிதல் அரசியல் அமைப்புச் சபையின் நோக்கங்களில் ஒன்று” என்றிருந்த வாசகம் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது இரண்டாவது.
‘நாட்டைக் காக்கப் போராடி பல தியாகங்கள் புரிந்து வெற்றி பெற்றவர்களைக் (சிங்களவர்கள்) காட்டிக் கொடுக்கும் இன்றைய அரசை பதவிக்குக் கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது” என்று பொது எதிரணியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கக்கியிருக்கும் இனவாத கோ~ம் மூன்றாவது.
தரம் தகுதியின் அடிப்படையிலன்றி, ஒவ்வொரு விடயங்களும் எந்தெந்தக் காலங்களுடன் சம்பந்தப்பட்டுத் தெரிவிக்கப்பட்டவை என்ற வகையில் மேற்சொன்ன இலக்கங்கள் குறிப்பிடப்பட்டன.
இன்றைய நல்லாட்சி என்ற அரசை ஆட்சிபீடம் ஏற்றியதில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதான பங்குண்டு. இது ஒரு ரகசியமான செயற்பாடல்ல.
இரண்டு தரப்புமே இதனைப் பகிரங்கமாகக் கூறி, ஒருவர் முதுகை மற்றவர் தடவிக் கொடுக்க ஆரம்பமாகி ஒரு வருடம் முடிந்துவிட்டது.
ஆனால், நம்பிக்கையில் வாக்களித்த தமிழருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றும் வாக்குறுதிகளாகவே இருக்கும் சிங்களத் தலைவர்களின் ஏமாற்றும் தொடர் அப்படியே இருக்கிறது.
பிளவுபடாத இலங்கைக்குள், வடக்கும் கிழக்கும் இணைந்த சம~;டி முறையிலான அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வு… இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டதும், கேட்டுக் கொண்டிருப்பதும், தொடர்ந்து கேட்கப் போவதுமாகும்.
இதனிலும் குறைந்தபட்சக் கோரிக்கையாக தமிழரிடம் எதுவுமில்லை.
2009ம் ஆண்டுக்கு முன்னரான முப்பதாண்டு காலம் தமிழரின் கொள்கைகளாகவிருந்த பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்ட தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைக்காக 2000ம் ஆண்டில் வன்னித் தலைமையால் உருவாக்கப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
2009ல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதுடன் இந்தக் கோரிக்கை கீறல் விழுந்த றெக்கோர்டாக மாறி, ‘நாங்கள் இன்று கேட்பது பிளவுபடாத இலங்கைக்குள்…” என்ற புதிய டிஜிட்டலாக மாறிவிட்டது கூட்டமைப்பின் கொள்கை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னித் தலைமை உருவாக்கவில்லை. இது எங்களின் தயாரிப்பு என்று இதன் தலைவர்கள் இப்போது கூறி வருவதையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது தமிழரின் தலைவிதியாகிவிட்டது.
வன்னித் தலைமை அரசோச்சிய காலத்தில் காட்டுக்குச் சென்று, அவர்கள் தரிசனம் பெறுவதை தவமாகக் கொண்டு, அவர்களோடு கூட்டாக நிற்கும் ஒளிப்படங்களை எடுத்து ஊடகங்களில் பிரசுரித்து தங்கள் வீட்டுச் சுவர்களிலும் அவைகளைத் தொங்கவிட்ட முஸ்லி;ம் காங்கிரஸ் இப்போது தொப்பியை மாற்றிப் போடுகிறது.
ஏறத்தாழ கூட்டமைப்பைப் போலவே முஸ்லிம் காங்கிரசும் காலத்துக்கேற்றவாறு சுருதியை மாற்றி, ‘வடக்கு கிழக்கு இணைப்புக்கு அனுமதிக்க மாட்டோம்” என்று அறிவித்துள்ளது.
ஓரளவுக்கு இது ஒன்றும் புதிய அறிவிப்பல்ல அதே பழைய பல்லவிதான். ஆனால் இப்போது கொஞ்சம் உசத்தி உரத்துச் சொல்கிறது முஸ்லிம் காங்கிரஸ்.
முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ் தேசியத் தலைவர்களால் தீர்வு காண முடியாதென்றும், வடக்கு கிழக்கு இணையுமானால், அதற்குமுன் முஸ்லிம்களுக்குத் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்றும் ராவூப் ஹக்கீம் குரல் கொடுத்துள்ளார்.
விடுதலைப் புலிகள் காலத்தில் இல்லாத துணிச்சல் அவருக்கு இப்போது வந்துள்ளதென்றால், அது கூட்டமைப்பின் பலவீனமென்றே பார்க்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பை சிங்கள தேசம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
இதனை அண்மையில் கூட்டமைப்பினரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாகத் தெரிவித்துவிட்டாரென்பது ஊடகங்களில் வெளியான – கூட்டமைப்பினால் மறுக்கப்படாத செய்தி.
நிலைமை இப்படியிருக்க சாமியை மிஞ்சி பூசாரி ஆடுவதுபோல இருக்கிறது முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்பு.
இலங்கை நாடாளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் தீர்மானம் இந்த மாதம் 9ம் திகதி எதிர்ப்பேதுமின்றி நிறைவேறியது.
மைத்திரியின் சுதந்திரக் கட்சியும், மகிந்தவின் பொது எதிரணியும் இந்தத் தீர்மானத்துக்குக் கொண்டு வந்த திருத்தங்களை ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி ஷதலையால் வணங்கி| ஏற்றுக் கொண்டதாலேயே இது ஏகமனதாக நிறைவேறியது.
ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை நீக்கவும், புதிய தேர்தல் முறை மாற்றங்களைக் கொண்டு வரவும், தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் என்ற மூன்று காரணங்களுக்காக புதிய அரசியமைப்பு கொண்டு வரப்படுகிறது என்று இதன் முன்னுரையில் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஷதேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது| என்ற வாசகம் இப்போது நீக்கப்பட்ட பின்னரே எதிர்ப்பு ஏதுமின்றி இது நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழர்களைப் பொறுத்தளவில் உயிரெடுக்கப்பட்ட ஒரு சடலமாகக் காணப்படும் இந்தத் தீர்மானத்தின் வாயிலாக உருவாகும் அரசியல் அமைப்பினால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட மாட்டாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது.
இச்சபை இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் என்று சுமந்திரனும், முன்னுரையில் எந்த மாற்றமும் கொண்டுவரக் கூடாதென்று சம்பந்தனும் கூறியவைகள் காற்றோடு காற்றாகப் போய்விட்டன. ஆனாலும் கூட்டமைப்பினரும் இந்தத் தீர்மானத்தை எதிர்க்காது விட்டது ஏனென்று புரியவில்லை.
இன்றைய அரசாங்கத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் கூட்டமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றதென்று மகிந்த ராஜபக்ச ஹைட்பார்க் மைதானக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதில் நிரம்பிய காரணங்களுண்டு.
1997, 1983 என்பவைகளை மீண்டும் உருவாக்கும் நோக்கிலான இனவாத வி~த்தை இங்கு இவர் விசிறி எறிந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சி அரசாங்கம், பொது எதிரணி என்று எதனுடைய ஆதரவும் இல்லாத ஒரு அநாதையின் நிலையில் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.
இப்படியே நிலைமை தொடருமானால் பதின்மூன்றாவது திருத்தம், உயர்பட்ச அதிகாரப் பரவலாக்கல், தமிழர் ஏற்கும் அரசியல் தீர்வு என்பதெல்லாம் வெறும் கானல் நீராகிவிடும் என்பது கல்லின் மேலான பதிவு.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila