ஜனாதிபதி என்ற வகையில் 19-வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னர் தாம் சுகாதார அமைச்சராகவும், விவசாய அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் மாகாணத்தின் கண்காணிப்பு அதிகாரங்களை மாகாண முதலமைச்சர்களுக்கு எழுத்துமூலம் வழங்கியிருந்தமையையும் நினைவு கூர்ந்துள்ளார்.
நேற்று முற்பகல் ஹிக்கடுவையில் இடம் பெற்ற மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது செயலமர்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
தான் ஜனாதிபதியாக பதவியேற்றது அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதற்காக அன்றி அதிகாரத்தை கையளிப்பதற் காகவும் எனத் தெரிவித்தார்.
இன்று உலக அரசியலில் எப்போதும் கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியலமைப்பு நிபுணர்கள் ஆகியோர் அதிகாரத்தை குவிப்பதிலன்றி அதிகாரத்தை பகிர்வது தொடர்பாகவே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக் காட்டினார். இவ் எண்ணக் கருவா னது எவ்வகையிலும் பலவீனமடையாது என்பதுடன் அதற்கெதிராக ஏதேனும் கருத்து முன் வைக்கப்படுமாயின் அது அபிவிருத்தி அடையாத சமூகம் ஒன்றின் குணவியல்பாகவே கருதப்படுமெனக் குறிப்பிட்டார்.
நவீன உலகில் உயர்ந்தபட்ச அபிவிருத்தியை எய்தியுள்ள அனைத்து நாடுகளும் அதிகாரப்பகிர்வு மற்றும் பிரதேச அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட அர சியலமைப்பின் ஊடாகவே அதனை சாத்தி யப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரே நாடு எனும் கொள்கையின் அடிப் படையில் செயற்பட்டு அரசாங்கமும் மாகாண சபைகளும் புரிந்துணர்வுடன் நடவடிக்கை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தினை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளை வகிக்கும் நபர்கள் நியதிச்சட்ட நிலைமைகளில் குறிப்பிட்ட ஒரு காலம் அப்பதவிகளை வகித்தபோதும் இந்நிறுவனங்கள் முன் னோக்கி செல்லவேண்டியுள்ளதால் அனைவரும் தத்தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரியவாறு நிறைவேற்றுவதற்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் பிரச்சினைகளை தீர்க்கும் நாகரிகமடைந்த மக்களின் குணவியல்புகள் அனைவரிடத்தி லும் காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனாதிபதி ஒரு கட்சியையும் பிரதமர் மற்றுமொரு கட்சியையும் பிரதிநிதித் துவப்படுத்தி இரண்டு கட்சிகளுக்கிடையிலும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஓர் அமைச்சரவையுடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல் இதற்கு முன் னர் காணப்படாத புதியதொரு அனுபவமெனத் தெரிவித்த ஜனாதிபதி, அர்ப்பணிப்பு இலட்சியம் மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு தேசத்தின் நன்மைக்காக பொது நோக்கத்தை நிறைவேற்றுவது அனைவர தும் பொறுப்பாகுமென தெரிவித்தார்.