பெல்ஜியத் தலைநகரின் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் உரிமை கோரியிருக்கிறது (நான்காம் இணைப்பு)

பெல்ஜியத் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் இன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.  நூற்றுக் கணக்கானவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். இத்தாக்குதல்களை தாமே மேற்கொண்டதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் சற்று முன்னர் உரிமை கோரியிருக்கிறார்கள்.
இன்று காலை செவன்ரம் விமான நிலையத்தில் இரண்டு குண்டு வெடிப்புக்களும் அதை அடுத்து  பெருநகர் தொடரூந்து மையத்தில் மூன்றாவது குண்டு வெடிப்பும் இடம்பெற்றது. இவ்விரண்டு தாக்குதல்களிலும் காயமுற்றவர்களின் எண்ணிக்கை 198 எனப் பிந்திய செய்திகள் கூறுகின்றன.
விமான நிலைய சிசிரிவியில் தாக்குதல்களை மேற்கொண்ட மூன்று சந்தேக நபர்கள் பதிவாகி உள்ளனர். அவர்களின்  புகைப் படங்களை `டி ஸ்ராண்டர்ட்` என்ற பெல்ஜியப் பத்திரிகை இன்று தனது முதற்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. விமான நிலையத் தாக்குதல்களில் வெடிக்காது போன குண்டொன்று  கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் இடம்பெற்ற இன்றைய தாக்குதல்களை அடுத்து பிரித்தானியா தனது முக்கிய போக்குவரத்து நிலையங்களிலும் எல்லைப் பகுதிகளிலும்  பாதுகாப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது. தயார் நிலையில் பாதுக்காப்புப் பிரிவினர் செயற்பட வேண்டும் என்று வெளியுறவுச் செயலர் தெரேசா கேட்டுள்ளார்.
பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகளின் கோழைத்தனம் : பெல்ஜியப் பிரதமர் காட்டம்(3 ஆம் இணைப்பு)
பிரஸ்ஸல்ஸில் ஸவென்டம் (Zaventem ) விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, கோரத்தனமான தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலாகவே தான் கருதுவதாகவும் பெல்ஜியத்தின் வரலாற்றில் இது சோகமான நாள் எனவும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சார்லஸ் மைக்கேல், “இது பெல்ஜிய வரலாற்றில் ஒரு பாரதூரமான தாக்குதலாகும். இந்தத் தாக்குதலை கோழைத்தனமாகவே நான் கருதுகின்றேன்.  அத்தோடு, தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஈனச் செயலாக இது கருதப்படுகின்றது. எமது நாட்டின் ஒற்றுமையைக் காட்ட நான் எல்லோருக்கும் அழைப்பு விடுகின்றேன்” என்று குறிப்பிட்டார்.
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள ஸவென்டம் விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பகுதிகள் மற்றும் நகரின் மத்தியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில், குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக ‘பிரஸ்’ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி குண்டுத்தாக்குதல்கள் தற்கொலைத் குண்டுதாரிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பெல்ஜியப் பொலிஸார் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரஸெல்ஸில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, பெருந்தொகையான படையினர் மற்றும் பொலிஸார் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டாலும்கூட பெல்ஜியத்தின் ஏசுவு செய்திச் சேவையானது, இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏனைய 35 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்தியை காணொளியுடன் வெளியிட்டிருந்தது.
எனினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை, பெல்ஜியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன. (2 ஆம் இணைப்பு)

  00:00           
00:00
 
00:00
         
 
 


பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள ஸவென்டம் விமான நிலையத்தின் விமானங்கள் புறப்படும் பகுதிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புக்களில், குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக பெல்ஜிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.  எனினும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் பலியானோர் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக சுயாதீன செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரஸெல்ஸில் அமைந்துள்ள ஸவென்டம் விமான நிலையத்தின் விமானங்கள் புறப்படும் பகுதிகளில் ஜி.எம்.ரி. நேரப்படி 07.00 மணிக்கு, இரண்டு குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது இடம்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியை அண்மித்த Maelbeek  மெட்ரோ போக்குவரத்து தளத்தில் மற்றுமொரு குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, மெட்ரோ முறைமை முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தீவிரவாத  தாக்குதலை அடுத்து பிரஸ்ஸல்ஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதும்,  தற்போதைய தாக்குதலை அடுத்து பெல்ஜியம் உயர் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட தொடர் தீவிரவாத தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வந்த, சலா அப்டெஸ்சலாம் பிரஸெல்ஸில் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸிலுள்ள ஸவென்டம் விமான நிலையத்தில் சற்று முன்னர் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் பற்றிய விபரங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத  நிலையில், விமானச் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்திருப்பதாக பெல்ஜிய அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை உறுதியாக கூறமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த விமான நிலையத்திலிருந்து மேலும் பல குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரஸல்ஸ் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

9
_88888650_brussels
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila