பிணையில் விடுதலையாகி புனர்வாழ்விற்கு மறுத்தால் மீண்டும் கைது செய்யப்படுவர்!
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள், புனர்வாழ்விற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் அவர்கள் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என் மீள்க்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் காணால் போனோர் குறித்து கூட்டமைப்பினால் நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குறித்து நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். முன்னதாக தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்பட்ட போதிலும் அவர்கள் மீதான வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறினார். இவ்வாறு இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் போது 19 பேருக்கு ஒரு வருட புனர்வாழ்விற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதில் 3 பேரே உத்தரவினை ஏற்றுக் கொண்டு புனர்வாழ்விற்கு சம்மத்தித்துள்ளதாகவும் கூறினார். ஏனையவர்கள் தாங்கள் குற்றமற்வர்கள் என்று வாதிட்டு வரும் நிலையில், அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தின் இந்த புனர்வாழ்வு நடவடிக்கையின் ஏற்க மறுத்தால் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மீள்குடியேற்ற அiமைச்சர் எச்சரித்தார்.
Add Comments