மன்னார் புதைகுழி விவகாரம்!மயானமென கதையை திருப்ப கடும் முயற்சி!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் யூலை மாதம் 06 திகதி வரைக்கும் மன்னார் நீதவான் இன்று ஒத்திவைத்துள்ளார். அத்துடன், அந்த புதைகுழி சட்டபூர்வமான மயானம் என வாதாடிவரும் இலங்கை காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறையினரை, அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி மற்றும் அப்பகுதியில் காணப்பட்டதாக கூறப்படும் கிணறு ஆகியவற்றை தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது மன்றில் முன்னிலையான குறித்த மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு பொறுப்பான குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடம் மயானம் என மன்றில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, அதனை நிரூபிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதே வேளை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பகுப்பாய்வு செய்வதற்காக பேராதனிய பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பகுப்பாய்வு அறிக்கை இது வரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
![]()
இதனால் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த அகழ்வு நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Post:
Add Comments