வலி.வடக்கு சேந்தான் குளம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சொந்தமான காணியினை இரா ணுவம் தனது தேவைக்காக சுவீக ரிப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இதற்கமைய இன் றைய தினம் குறித்த காணியை அள வீடு செய்யும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட உள்ளன.
இந்த நிலையில்,
இந்த காணி அளவீடு செய்யும் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு அப்பகுதி மக்கள், தேவாலய நிர்வாகத்தினர், மற்றும் அரசியல்வாதிகள் அனைவரினை யும் ஒன்றிணையுமாறு வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் எஸ்.சஜீவன் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆட்சியில் யாழ் மாவ ட்டம் மட்டுமல்லாது வடக்கின் ஏனைய மாவ ட்டங்களிலும்,
இராணுவத்தினரின் தேவைகளுக்காக காணிகளைச் சுவீகரிக்கும் வகையில் நில அளவை மேற்கொள்ளப்பட இருந்த நிலை யில் பொது மக்களினதும் அரசியல்வாதிகளி னதும் எதிர்ப்புக்களையடுத்து அத்தகைய நட வடிக்கைகள் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீளவும் அத்தகைய நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் தேவைகளு க்காக பொது மக்களினது காணிகளைச் சுவீ கரிக்கும் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந் நிலையில் குறித்த இடங்களில் நில அளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்வதற்குச் சென்றபோது அங்கு திரண்ட பொதுமக்களி னாலும் அரசியல்வாதிகளினாலும் அந் நடவ டிக்கை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் நல்லாட்சியில் பொதுமக்க ளின் சொத்துக்களை ஆக்கிரமிக்க மாட்டோம், பொதுமக்களிற்கு பாதுகாப்பை வழங்குவோம் எனக் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையிலும் அதே நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப் பட இருக்கின்றது.
இதற்கமைய வலி வடக்கின் சேந்தான் குளம் பகுதியில் தேவாலயத்திற்குச் சொந்த மான 4 பரப் புக் காணியை கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் வகையில் இன்றைய தினம் நில அளவைத் திணைக் களத்தினரால் நில அளவீடு செய்யப்பட உள் ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வலி தெற்கின் திருவடி நிலைப் பகுதியிலும் நாளை மறுதினம் 10 ஆம் திகதி 11 ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரிக் கும் வகையில் நில அளவைத் திணைக்கள த்தினரால் காணிகள் அளவீடு செய்யப்பட இரு க்கின்றன. இது தொடர்பாக நில அளவைத் திணைக்களத்தினரால் அரச அதிபர் உள்ளி ட்ட தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிரு க்கின்றது.
இதே வேளையில் வலிகாமம் வடக்கு உட்பட மாவட்டத்தில் பல இடங்களிலும் நடை பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்க ளின்போது பாதுகாப்புத் தேவைகளுக்காக காணிகளை நில அளவை செய்யும் நடவடி க்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த போதும் தற்போது அதனையும் மீறி நில அளவை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கி ன்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பொதுமக்களும் அரசியல்வாதி களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்ற நிலையில், குறித்த பகுதிகளில் நில அளவை செய்யும் இடங்களில் திரண்டு கடந்த காலங் களில் தடுத்து நிறுத்தியது போன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நில அளவை செய் யும் பணிகளையும் தடுத்து நிறுத்த வேண்டு மென்றும் பல்வேறு தரப்பினர்களும் மக்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்துள்ள னர்.