சிறிலங்கா தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக விசாரணைக் குழுவிடம், ஐ.நா பணியாளர் ஒருவர் தாம் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக சாட்சியம் அளித்திருப்பதாக இன்னர் சிற்றிபிரஸ் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் பணியாற்றிய போது, வெள்ளைவானில் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தற்போது, சென்னையில் வசிக்கும் அந்தப் பணியாளர் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக், “ஐ.நா பணியாளர்கள் அனைவரினதும் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது ஐ.நாவின் கடமை.
பணியாளர் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டிருந்தால்,அதை நாங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்று ஆராய வேண்டியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.