நாட்டில் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடைகளால் பொருளாதாரத்துறை மட்டுன்றி மக்களின் இயல்பு நிலையும் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளது.
நாடு முழுமையிலும் மின்சாரத் தடை ஏற்பட்டமைக் கான காரணம் என்ன என்பதை இலங்கை மின்சார சபையும் அதன் பொறுப்பு வாய்ந்த அமைச்சரும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமாயினும் அதுபற்றி இன்னமும் எந்தத் தகவலும் இல்லை.
மின்சாரத் தடை தொடர்பில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்தக்குழுவானது ஒருவார காலத்துக்குள் தனது முதற்கட்ட அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று கூறப்படுகின்றது.
இச்சம்பிரதாயங்கள் ஒருபுறமிருக்க நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடையின் பின்னணி என்ன? என்பது தொடர்பில் ஊடகங்களும் பொதுமக்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை என்பது நல்லாட் சியின் மிகப்பெரும் பலவீனத்தைக் காட்டி நிற்பதாக கூறுவோர் ஒருபுறம்.
நல்லாட்சியை கவிழ்ப்பதற்கான ஒரு புரட்சிதான் இதுவென்று உரைப்போர் மறுபுறம்.
மின்சாரத்தை தடை செய்து மக்களின் இயல்பு நிலையைக் குழப்பி, இந்த அரசாங்கத்தால் ஆட்சி செய்ய முடியாது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பின்புலச் செயற்பாடே இதுவென்று கூறுவோரும் உளர்.
எது எப்படியாயினும் மின்சாரத் தடைஏற்படும் போது அதனை உடனடியாக சீராக்கம் செய்வது அரசின் கடமை.
அதி அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை வழங்குவதில் அரசு மிகப்பெரும் சவாலை சந்தித்துள் ளதாயினும் அதனை உடனடியாக வெற்றி கொள்வதே அரசின் பலமாகும்.
இந்நிலையில் நல்லாட்சியில் மின்சாரத் தடை ஏற்பட்டமை, இந்த அரசு எப்படி நாட்டை கொண்டு செல்லும்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்பாகிவிடும்.
இதற்கு மேலாக, தற்போது இலங்கையின் பொருளாதார மையங்கள் மற்றும் குளிரூட்டிய அலுவலகங் களாக மாறிய நிர்வாக அமைப்புகள் என அத்தனையும் ஸ்தம்பிதம் அடையும் அளவில் மின்சாரத் தடை உள்ளது.
எனவே, மின்சாரத் தடை தொடர்பில் அரசு அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் நாட்டின் அத் தியாவசிய தேவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
இலங்கையின் தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய கட்சி தொடர்பான சலசலப்புகள்; ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து அதன் பலத்தை வேரறுக்க ஐக்கிய தேசியக் கட்சி சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள்; மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒரு தட வையேனும் சிறைச்சாலைக்குச் சென்றாக வேண்டும் என்ற முடிவுகள் என அனைத்தும் சேர்ந்து நாட்டை ஒரு புரட்சிப் பாதைக்குஇட்டுச் செல்லுமோ! என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகையதோர் நிலைமை இனக்கலவரங்களு க்குக் கூட வித்திடலாம் என்பதால், ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன உடனடியாக நாட்டில் விசேட பாது காப்பு முறைமைகளை அமுல்படுத்த வேண்டும். இல் லையேல் நல்லாட்சியின் எதிர்காலம் ஆரோக்கியமா னதாக அமையாது.
தண்ணீர், மின்சாரம், மருத்துவம் என்ற சேவை வசதிகள் யாருடைய ஆட்சியில் பாதிக்கப்பட்டாலும் அதை மக்கள் ஒருபோதும் ஏற்கொள்ளமாட்டார்கள் என்பதால், மின்சாரத் தடையின் பின்னணியை வெட் டிச் சரிப்பதில்தான் நல்லாட்சியின் வெற்றி தங்கியுள்ளது.