மட்டக்களப்பு, ஏறாவூர் அமீர் அலி வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
‘வரலாறு தெரியாத அரசியல்வாதிகள் மற்றும் பிரதேசத்தைப் பற்றித் தெரியாதவர்கள், மற்றும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் வேற்றுமைப்படுத்தி எந்நேரமும் துவேசத்தனமாக அரசியல் செய்பவர்கள் ஆகியோர், இன ஐக்கியத்தை விரும்புகின்ற தமிழ் மக்களால் எதிர்காலத்திலே தோற்கடிக்கப்படுவார்கள் என்பது உறுதி.
கடந்த காலத்தில் இனத் துவேசம் பேசித் திரிந்தவர்கள் எல்லோரும், தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக போக்கிடமின்றி மௌனித்துப் போய் இருக்கின்றார்கள்.
இந்த நல்லாட்சியின் பங்காளிகள் என்று கொக்கரித்து கொழும்பு சிங்களத்திற்கு ஒரு நாடகமும், வடக்கு கிழக்கு அப்பாவித் தமிழ் மக்களுக்கு இன்னொரு நாடகமும் போடும் சிலரால் ஏன் இன்னமும் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியவில்லை? போர்க் காலத்தின்போது வடக்கு கிழக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழ்ப் பொது மக்களின் நிலங்களை ஏன் உங்களால் முழுமையாக விடுவிக்க முடியவில்லை?
தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபர்கள், இனிமேலாவது அப்பாவித் தமிழ் மக்களை தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ வழிவிடவேண்டும்’ என்றார்.