
முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் நாயாறுப்பகுதிகளில் கடந்த வாரத்தில் மட்டும் 200 இற்கும் மேற்பட்ட தென்னிலங்கைமீனவர்கள் அத்துமீறி - அடாத்தாகக் குடியேறியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்டமீனவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். இதனை உரிய அதிகாரிகளும்உறுதிசெய்துள்ளனர்.எனினும், அத்துமீறிக் குடியேறியுள்ள தென்னிலங்கை மீனவர்கள் தொடர்பில் உடனடியாக- உறுதியான முடிவை எட்ட முடியாத நிலைமையே அதிகாரிகள் மட்டத்தில் உள்ளது எனமுல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் 77 பேருக்கு மட்டும்மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும்200இற்கும் மேட்பட்ட மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் குடியேறியுள்ளமைஅதிகாரிகளிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டது.முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் நாயாற்றுப்பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களைத் தடை செய்யுமாறுமுல்லைத்தீவு மீனவர்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில்,அண்மையில் புதிதாக 25 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளது எனத் தெரிவித்துதென்னிலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிகளில் புதிதாக 25 வாடிகளை அமைத்துகுடியேறியிருந்தனர்.தனிநபரின் காணியில் அவர்கள் வாடிகள் அமைத்துள்ளார்கள் என்று, குறித்த காணியின்உரிமையாளரால் கிராம சேவகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.இதனை அடுத்து அந்தப்பகுதிக்குச் சென்ற கிராம சேவையாளர்கள் மீது தென்னிலங்கை மீனவர்கள் தாக்குதல்நடத்தியதோடு மீனவர்களுக்குச் சார்பாக இராணுவத்தினராலும் கிராம சேவையாளர்கள்அச்சுறுத்தப்பட்டிருந்தார்கள்.இந்நிலையில், கடந்த வாரம் முதல் 200இற்கு மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்புதிதாக வந்து குடியேறியுள்ளனர் எனவும், அவர்கள் ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட25 வாடிகளிலுமே தங்கி உள்ளனர் எனவும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள்தெரிவித்தனர்.தென்னிலங்கை மீனவர்களுடைய அத்துமீறிய செயற்பாட்டைத் தடுப்பதற்கு இதுவரையாராலும் முடியவில்லை எனவும், இதனால் தமது வாழ்வாதாரம் மேலும்கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது எனவும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தமீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.