இவ்வாறு உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் நபர்களை “கிரீஸ் மனிதன்” என அழைக்கின்றனர்.
கடந்த ஆட்சியின் போது இவ்வாறான சம்பவங்கள் பல பதிவாகி இருந்தன.
எனினும் தற்போதைய காலக்கட்டத்திலும் குறித்த கிரீஸ் மனிதன் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி, கொழும்பு - பத்தரமுல்லையில் கிரீஸ் மனிதன் ஒருவன் வீடுகளை சுற்றிவரும் காட்சி கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் 29 வயதான மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து தங்க ஆபரணங்களையும், சில பற்றுச்சீட்டுக்களையும், பெண்களின் உள்ளாடைகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதோடு இவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.