ஆட்சி மாற்றத்தின் பின்னரான கால கட்டத்தில் நன்மையடைந்த பலர் மனித முக மூடிகளுடன் எமது தமிழ் மக்களை அதிகமான தேடிவருகின்றார்கள் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.மாமனிதர் சிவராமின் 11ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நினைகூரும் பொது நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஊடகவியலாளருக்கான அழுத்தங்கள் ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு குறைந்திருக்கின்றன. ஆனால் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மறுபடியும் அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன.தற்போதைய ஆட்சி மாற்றத்தினால் பெரும் பலனடைந்தது மேற்குலக நாடுகள், அடுத்தது இந்தியா, அடுத்தபடியாக சிங்கள மக்கள் மற்றும் ஓரளவுக்கு முஸ்லிம் மக்கள்.எமது தமிழ் மக்களுக்கு ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் நன்மையெனப்படுவது. ஒப்பீட்டளவில் அதிகரித்த சிவில் ஜனநாயகம் வெளிதான்.ஆனால் அந்த சிவில் ஜனநாயக வெளியே எளிதில் நொருங்கக் கூடியதோ என்ற அச்சம் எம் மத்தியில் ஏற்படத் தெடாங்கியது. தமிழ் மக்களுக்குரிய ஒரேயொரு நன்மையும் இப்பொழுது கேள்விக்குள்ளாகி விட்டது.ஆட்சி மாற்றத்தினால் நன்மையடைந்த எல்லாத் தரப்புகளுமே இப்பொழுது தமிழ் உறவுகளைத் தேடி வருகின்றார்கள்.தமிழ் மக்களாகிய எம்மைத் தேடி வரும் எல்லாரும் மனித முக மூடியுடன் தான் வருகின்றார்கள்.அந்த வகையில் தெற்கிலிருந்து வருகின்ற அரசியல் வாதிகள், தொடக்கம் மேற்கில் இருந்து வருகின்ற மனிதாபிமான பணியாளர்களும் மனித முக மூடியுடன் தான் வருகின்றார்கள், உள்ளூர் எங்கள் அரசியல் வாதிகளும் மனித முக மூடிகளுடன் தான் வருகின்றார்கள். அந்த முக மூடியைக் களைய வேண்டிய அனைத்துப் பொறுப்பும் எங்கள் ஊடகவியலாளருக்கு உண்டு.இவ்வாறு முக மூடிகளுடன் வருவதினால் தான் இவ்வாறன பல அமைக்களுக்குள் முறுகல் நிலை ஏற்படுகின்றது என்ற விமர்சனங்களும் எழுகின்றன.யார் முக மூடியுடன் நிற்கின்றார் யார் இல்லை என்பது மிக கலங்கலாகத் தெரிகின்றது. அதனால் ஊடகவியலாளர்கள் மத்தியிலேயே கூறுபாடுகள் வரத் தொடங்கி விட்டன.ஊடக அமைச்சும் மனித முக மூடியுடன் தான் வருகின்றது. அது அவ்வாறு வரும்போது ஊடக அமைப்புக்கும், ஊடக அமைக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்துகின்றது.இவ்வேளை யாரே யாரையோ கையாளுகின்றார்கள் என்ற எண்ணம் தோன்றுகின்றது.ஆட்சி மாற்றத்தின் பின்னராக ஊடகச் சூழல் எனப்படுவது ஒப்பீட்டளவில் பரவாயில்லை தான், கடந்த சில வாரங்களாக கேள்விக்குள்ளாகி வருகின்றது.அதே சமயம், ஒரு நாட்டின் ஊடகச் சூழலை விளங்கிக் கொள்வது என்பது அந்த நாட்டின் அரசியல் சூழலை விளங்கிக் கொள்வது தான்.இந்த நாட்டின் அரசியல் சூழல் எனப்படுவது, கடந்த ஓராண்டு காலமாக எப்படி இருக்கின்றது.இனப் பிரச்சினைக்கான ஒரு தீர்வு உட்ப்பட நாட்டின் தலையாக பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்பதற்கான அரசியல் இருப்பு குறித்து சிந்திக்கும் ஒரு கால கட்டத்தில் நாங்கள் வாழுகின்றோம். மிகத் தீர்மானகரமான கால கட்டம்.இக்கால கட்டத்தில் ஒரு அரசியல் தீர்;வை நோக்கி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் கனிய வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இரு தரப்பு ஊடகங்களுக்கும் உண்டு.ஆனால் குறிப்பாக தென் இலங்கையில் அரசியல் தீர்வை நோக்கி சிங்கள மக்களை கனிய வைக்கும் வகையில் நிலமை காணப்படுகின்றதா?. இல்லை.சிங்களக் குடியானவர்களை ஓர் அரசியல் தீர்வை கனிய வைக்கும் பொறுப்பை தென் இலங்கை ஊடகங்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?. இல்லை. பெடரல்கோபியா மறுபடிம் தலையெடுத்து விட்டது.கடந்த ஆண்டு என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஊடகத் துறையில் தமிழ் மக்கள் பேரவையும், வட மாகாண சபையும் இரு முன்மொழிவுகளை முன் வைத்திருக்கின்றன.சமஷ்டி பற்றிய உரையாடல் தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் திகழ்ந்த கால கட்டமாக கடந்த ஆண்டு காணப்படுகின்றது.ஆனால் சிங்களத் தரப்பில் தென் இலங்கையை பார்ப்போமாக இருந்தால் அங்கே சமஷ்டிக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன. சமஷ்டி என்பதை பிரிவினையாக காட்டப்படுகின்றது.தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றி துலக்கமாக வெளிப்படுத்தப்படும் கால கட்டத்தில் தென் இலங்கையில் அதே பெடரல்கோபியா தலையெடுத்திருக்கின்றது.தென் இலங்கை பிரதான ஊடகங்கள் அதே பெடரல்கோபியாவை சமஷ்டி மீதான அச்சத்தினை தொடர்ந்தும் பெரிதாக்கிக் கொண்டே போகின்றன.குறித்த விடயத்தில் சுவையான விடயம் என்னவென்றால். அரசுக்கு சார்பான ஊடகங்கள் இதில் மிகக்குறைந்த அளவிற்கு இன முறன்பாட்டை ஊக்குவிற்கும் கருத்துக்களை விதைக்கின்றன.அதே சமயம் அரச சாரா ஊடகங்கள் உச்சமாக இன முரண்பாட்டை விதைக்கும் கருத்துக்களை எதிர்கின்றன.மறுபடியும் அவர்கள் பிரிவினை தொடர்பான அச்சத்தை உருவாக்க தொடங்கி விட்டார்கள்.அண்மைக் காலத்தில் நிகழ்ந்த கைதிகளின் நிலையை முன்னிட்டு நிலைமை மோசமாக இருக்கின்றது என தெரிவித்தார்.