
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு செய்த சேவைகள் என்னவென்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், மாவட்ட அபிவிருத்தி பதவிகளையும் கொண்டுள்ளது. இன்னும் சிலர் அரச பதவிகளையும் கொண்டுள்ளனர். இவ்வாறு பதவிகளை கொண்டுள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பு கொண்டுள்ள பதவிகளினால் தற்போது இடம்பெறும் காணி அபகரிப்பு, கடத்தல், மற்றும் சிங்கள மயமாக்கலை தடுத்து நிறுத்த முடிகின்றதா? இந்த நிலையில் இவ்வாறான பதவிகள் எதற்கு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.