கடந்த வருடத்தைவிட அதிகம் வெப்பத்தை உணர்ந்த யாழ்ப்பாணம்
யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலையானது கடந்த வருடத்தைவிடவும் இவ்வருடம் 0.6 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக யாழ்.பிராந்திய வானிலை அவதான நிலைய பணிப் பாளர் எஸ்.பிரதீபன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை குறித்து தெளிவுபடுத்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையில் உச்சத்தில் நிலைகொண்டிந்த சூரியன் அவ்விடத்திலிருந்து நீங்கியுள்ள போதிலும் வெப்பநிலை உயர்வக காணப்படுவதாக கூறினார். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு, யாழ்.மாவட்டத்தில் 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையே அதிகூடிய வெப்பநிலையாக காணப்பட்டதாக குறிப்பிடும் அவர், அது இம்முறை 36 பாகை செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளதுதாகவும், இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 0.6 பாகை செல்சியஸ் அதிகமாகும் என்றும் கூறினார். சூரிய வெப்பத்தினை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதனாலும், வாகனங்களின் பாவனை அதிரித்துள்ளமையினாலும் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இடைநிலை பருவப்பெயர்ச்சி காலம் தொடங்குவதனால் தொடர் வெப்பநிலை காணப்படும் என்பதுடன் மாலை வேளையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் -
Add Comments