ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதி இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி, சந்தேக நபர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட பதிவேட்டினை ஒப்படைக்குமாறு இராணுவத் தளபதிக்கு உத்தரவிடுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இதனையடுத்து பதிவேடுகளை ஒப்படைக்குமாறு இராணுவத் தளபதிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போகச்செய்யப்பட்ட வழக்கில் கைதான ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.