வட மாகாண சபையின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென அதன் உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்டு முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக வெளியான செய்திகள் குறித்து, எமது ஆதவன் செய்திச் சேவை வினவியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வட மாகாண சபையின் சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதாகவும் மக்களது எதிர்பார்ப்புகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் கடந்த காலங்களில் மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிட்ட அனந்தி, நிர்வாக சீர்கேடற்ற, ஊழல் மோசடியற்ற சிறந்த நிர்வாகமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் வட மாகாண அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற வகையில் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குறித்த கடிதத்தை ஒப்படைத்ததாக மேலும் குறிப்பிட்டார்.