தினேஸ் குணவர்தனவின் கருத்து விந்தைக்குரியது: விக்னேஸ்வரன்
ஓன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவராகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன போன்று படித்தவர்கள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வால் நாடு பிளவுபடும் என கூறுவது விந்தைக்குரிய விடயமாக உள்ளதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகாண சபையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அண்மையில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் வட மாகாண சபை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பிலும் அவர் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.
Related Post:
Add Comments