எப்படியிருப்பினும் இந்தக் கடற்பகுதியில் சீனா தனது நலனைப் பாதுகாத்துக்கொள்ளும் என சீனா அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இதற்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.
இதன்காரணமாகவே, தென்சீனக் கடற்பரப்பில் பிலிப்பைன்ஸ் கடற்படையினருடன் அமெரிக்கக் கடற்படையினரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஷ் காட்டர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் முகாமிட்டிருப்பதுடன், 300 அமெரிக்க இராணுவத்தினரையும் அங்கே நிலைகொள்ள வைத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தற்போது அவுஸ்திரேலியாவும், ஜப்பானும் ஆதரவு வழங்கும் முகமாகச் செயற்படுகின்றன. அவுஸ்திரேலியா கடந்த 4ஆம் திகதி இவ்விருநாடுகளுடனும் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது. இப்பயிற்சியில் 5000 வீரர்கள் ஈடுபட்டனர். ஜப்பான் பயிற்சியில் ஈடுபடாது தன்னுடைய இரு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்நடவடிக்கை தொடர்பில் ஆஷ்காட்டர் தெரிவிக்கையில், இந்நடவடிக்கையானது சீனாவின் சர்வாதிகாரப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.