பறவைக்காவடி கவிழ்ந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றச் சென்ற இளைஞர் பலி!

முல்லைத்தீவு- அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து மரணமானார். இன்று காலை மம்மில் பிள்ளையார் ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, குறித்த இளைஞன், பறவைக்காவடி எடுத்துக்கொண்டு ஆலயத்திலிருந்து பயணித்துள்ளார்.

இதன்போது, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில், உழவு இயந்திரம் கவிழ்ந்து குறித்த இளைஞன் பலியாகியுள்ளார். இடதுகரை முத்துஐயன்கட்டைச் சேர்ந்த 26 வயதுடைய வசந்தகுமார் கஜதீபன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். இந்த அனர்த்தத்தின் போது படுகாயடைந்த மற்றுமொரு இளைஞன் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila