இதற்கமைய, இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைப் பொறிமுறை எதுவும் தேவையில்லையென விசாரணையில் கலந்துகொண்ட 44.2 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் விசாரணைப் பொறிமுறை ஒன்று தேவையென 42.2 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
விசாரணைப் பொறிமுறை தேவையென வலியுறுத்துபவர்களில் 47.3 வீதமானவர்கள் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் இல்லாமல் உள்நாட்டு விசாரணையே தேவையெனவும் வலியுறுத்தியுள்ளனர்.
9 வீதமானோரே முழுக்க வெளிநாட்டுத் தலையீட்டுடன் விசாரணை நாடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ், சிங்கள மொழிகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை 49வீதமானோர் ஆதரிப்பதுடன் 41வீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மற்றும், வாழ்க்கைச் செலவை அரசாங்கம் கையாளும் முறையில் 51.2 வீதமானோர் அதிருப்தி கொண்டுள்ளதுடன் 30வீதமானோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் 41 வீதமானோர் அரசாங்கத்தில் நம்பிக்கை வைக்கவில்லை. இதேவேளை 34 வீதமானோர் அரசாங்கம் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக நம்புகின்றனர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அரசியலமைப்புத்தான் தீர்மானிக்கவேண்டுமெனவும் அதற்கு வெளியே அந்த எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்கக்கூடாது எனவும் ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் தவறான நடத்தைகளில் மதகுருமார் ஈடுபட்டமை நிரூபித்தால் மதவேறுபாடின்றி சட்டரீதியாகக் கண்டிக்கப்பட வேண்டுமென 74.4 வீதமானோர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 25 மாவட்டங்களில் பிரதான சமூகத்தவர்கள் மத்தியில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் 2102 பேர் கலந்துகொண்டமை குறிப்பிடத் தக்கது.