பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களை கொண்ட வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு தனி மாநிலமாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவு முன்மொழிவு குறித்த வட மாகாண சபையின் விசேட அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவு முன்மொழிவு குறித்த வட மாகாண சபையின் விசேட அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், தமிழ் பேசும் பிரதேசத்தைக் கொண்ட வட மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், ஏனைய ஏழு மாகாணங்கள் மற்றொரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விரு பரந்த மொழி ரீதியான மாநிலங்களில், தமிழ் பேசும் முஸ்லிம்கள் வடக்கு மற்றும் கிழக்கில் ஓர் அலகாகவும், தமிழ் பேசும் மலையக தமிழர்கள், நாட்டின் ஏனைய பகுதியில் ஓர் அலகாகவும் இனங்காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, சிங்கள மொழி பேசும் மக்களை கொண்ட மாநிலமானது அதனுள்ளே பிரிக்கப்படல் வேண்டுமா என்ற கேள்வியானது சிங்கள மக்களாலேயே தீர்மானிக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.