நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் 25ஆண்டுகளுக்கு முன்னர் தென்னமரவடி மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் குடியேற்றப்படாமலேயே உள்ளனர். எனினும் குடியேற்றப்பட்டவர்களுக்கு எந்தவொரு உதவித் திட்டங்களும் வழங்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பாகவே தான் பார்ப்பதாகவும் துரைரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 13 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டதாகவும் திட்டமிட்ட முறையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு மாகாணசபை மாதாந்த அமர்வில் எதிக்கட்சித் தலைவரான தண்டாயுதபாணி தென்னமரவடி கிராமத்தின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் அவசர பிரேரணை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். காணி அதிகாரம் மத்திய அரசுக்கு உரியது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காட்டியே, மக்களின் பாரம்பரியமான காணிகள் பறிக்கப்பட்டுவருவதாக தண்டாயுதபாணி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு எடுக்கப்படவேண்டுமெனவும் அவர் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.