இந்த அரசியல் தீர்வுத்திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருத்தம் செய்யப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைபானது விரைவில் அச்சுப்பிரதியாக வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் பேரவையானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் ஜனவரி இரண்டாம் திகதி தனது வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. ஜனவரி 31ஆம் திகதி நடைபெற்ற தனது மூன்றாவது கூட்டத்தொடரில் அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இந்த அரசியல் தீர்வுத்திட்டமானது மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டு இன்று அதன் நான்காவது கூட்டத்தொடரில் சில திருத்தங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.