
சமஸ்டி ஆட்சி முறைமை தமிழீழ விடுதலைப் புலிகளின் வழியை விடவும் வித்தியாசமானது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி ஆட்சி முறைமையே கோரப்படுவதாகவும் புலிகளின் தனி இராச்சிய கோரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமது யோசனைகளை முன்வைத்த போது இந்த கருத்து வெளியிடப்பட்டள்ளது.இவ்வாறு சமஸ்டி முறைமை உருவாக்க்பபடுவதன் மூலம் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகள் உறுதி செய்யப்படுவதுடன், நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.