சிறீலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தற்போதைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
துன்புறுத்தல்கள், கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் அடங்கலாக பதினொரு குற்றச் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3வயதுச் சிறுமி ஒருவர் கடந்தப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது பெற்றோர்கள், சகோதரர் காவல்துறையினரால் அழைக்கப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராணுவ ஊடகப்பிரிவுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயந்த ஜெயவீரவிடம் வினவியபோது, குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின் பாதுகாப்புச் செயலருடன் கலந்தாலோசித்து எதிர்வரும் 18ஆம் திகதி விளக்கமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.